ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து குறித்த 10 தகவல்கள்

  • 10 ஏப்ரல் 2017

சென்னையின் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது என்பது குறித்த பத்து தகவல்கள்:

1.தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2.வருமான வரித்துறையினரால் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

3.அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

4.ஏப்ரல் 7-ஆம் தேதி வரை, ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், 35 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5.விநியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த பணம் தவிர, விளக்கு, டி-ஷர்டுகள், சில்வர் தட்டுகள், மொபைல் போன், சேலை உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

6.வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் கிடைத்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிரப்பட்டது.

7.விஜயபாஸ்கரின் கணக்காளரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு காகிதத்தில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க, அமைச்சர்கள் உள்பட பல்வேறு அரசியல்வாதிகளுக்கு 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான விவரங்கள் இடம் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரிடமிருந்து ரூ.5 கோடி கைப்பற்றப்பட்டது. 89 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு வழங்கும் பொறுப்பு யார் யாரிடம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல், எம்எல்ஏ விடுதியில் விஜயபாஸ்கரின் அறையிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. கைப்பற்றப்பட்ட வாக்காளர் பட்டியலில், ஒவ்வொரு வாக்காளர் பெயருக்கு எதிரிலும், அவர் திமுகவா, அதிமுகவா, அவருக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும், வேறு சிலருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

10. தற்போதைய சூழ்நிலை, நியாயமாக தேர்தல் நடைபெறுவதற்கு உகந்ததாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அமைச்சர்கள், முதலமைச்சர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்ய ஸ்டாலின் கோரிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து — தேர்தல் ஆணையம் கூறும் காரணம் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்