இது வைரல்: போராட்டக்காரரை எதிர்த்து புன்னகைக்கும் பெண்ணின் புகைப்படம்

பர்மிங்ஹாமில் ஆங்கிலேய பாதுகாப்பு அணி (இடிஎல்) போராட்டக்காரரை பார்த்து புன்னகைக்கும் சாஃபியா கானை புகைப்படம் எடுத்திருப்பது பரவலாக அதிக அளவு இணையத்தில் பகிரப்படும் புகைப்படமாக இருப்பதாக அவர் பிபிசியிம் தெரிவித்திருக்கிறார்.

சாஃபியா கான்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

இன்னொரு பெண் இடிஎல் உறுப்பினர்களை பார்த்து "இஸ்லாமியரை கண்டு பயப்படுவோர்" என்று கத்தியபோது இந்த விஷயத்தில் தலையிட்டேன்

தன்னை போல பர்மிங்ஹாமில் வாழும் ஒருவரை பாதுகாக்க முன்வந்தபோது, நடைபெற்ற வாக்குவாதத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியின்போது புகைப்படம் பிடிக்கப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கானோருக்கு சாஃபியா கானின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

இன்னொரு பெண் 25 ஆண்களால் சூழப்பட்டிருந்ததை பார்த்தபோது, தான் அங்கு தலையிட்டதாக பர்மிங்ஹாமை சேர்ந்த கான் கூறியிருக்கிறார்.

தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு நடைபெற்ற ஒரு நிமிட மௌன அஞ்சலியின்போது, அவர் குறுக்கிட்டதாக இடிஎல் தெரிவித்திருக்கிறது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணியின் பகுதியாக தான் இருக்கவில்லை என கூறியிருக்கும் கான், இந்த புகைப்படம் உலகம் முழுவதும் மறுபதிவிடப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று பிபிசியிடம் கூறியிருக்கிறார்.

"முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி"

தொடக்கத்தில் நான் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனால், இன்னொரு பெண், நூற்றாண்டு சதுக்கத்தில் கூடியிருந்த இடிஎல் உறுப்பினர்களை பார்த்து "இஸ்லாமியரை கண்டு பயப்படுவோர்" என்று கத்தியபோது இந்த விஷயத்தில் தலையிட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

வலிமையானவர்களாக தெரிந்த 25 இடிஎல் ஆண் உறுப்பினர்களின் குழு ஒன்று அந்த பெண்ணை சுற்றியிருந்தனர் என்று கான் குறிப்பிட்டுள்ளார்.

"அவரை முற்றிலும் சுற்றி வளைத்திருந்தனர்... அவருக்கு ஆதரவு தெரிவிப்பவராக என்னை குறிப்பிட்டு அவர்களுக்கு முரணாக பேசினேன்".

அதன் பிறகு போராட்டக்காரர்கள் என்னை சுற்றி நின்றனர். அந்த காட்சியை பிரஸ் கூட்டமைப்பு புகைப்படக்கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார் என்று கான் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானிய மற்றும் போஸ்னிய பெற்றோருக்கு ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிறந்த கான், இதற்கு தான் சிறிதளவும் அஞ்சவில்லை என்கிறார்.

இடிஎல் உறுப்பினர் ஒருவர் தன்னுடைய கையை என்னுடைய முகத்தில் வைத்தார். அது மிகவும் அடாவடித்தனமாக இருந்தது.

ஒரு போலீஸ்காரர் அங்கிருந்தார். அதனால் அந்த மனிதர் என்னுடைய முகத்தில் இருந்து தன்னுடைய கையை எடுத்தார். நான் ஆத்திரத்துடன் பதிலளித்திருக்க கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த புகைப்படம் பகிரப்பட்டோரில் "இந்த வார சிறந்த புகைப்படம்" என்று புகழ்ந்துள்ள பியர்ஸ் மோர்கனும், பர்மிங்ஹாம் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸூம் அடங்குகின்றனர்.

ஸ்டாக்ஹோம் தீவிரவாத தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெற்ற ஒரு நிமிட மௌன நிகழ்வுக்கு ஊறுவிளைவித்த ஒரு குழுவின் பகுதியாக கான் இருந்ததாக இடிஎல் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் நீங்கள் படிக்க விரும்பலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்