'அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை' - திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம்

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, அரசு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டி அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சு. குணசேகரன் இன்று வியாழக்கிழமை உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம்
படக்குறிப்பு,

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம்

அதிமுக அம்மா அணியை சேர்ந்த சு.குணசேகரன், திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், தனது தொகுதியில் மக்கள் விரும்புகின்ற வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தனக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றம் சாட்டி இவர் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 4-ஆவது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும், அரசு மருத்துவ கல்லூரி , பொறியியல் கல்லூரி ஆகியவற்றை தொகுதியில் தொடங்கிட வேண்டும், தொழில் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு தனியாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.

ஒரு வார காலத்தில் தனது கோரிக்கையை பரிசீலிக்காவிட்டால், சென்னையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் தலைமையிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்