சர்ச்சையைக் கிளப்புகிறது காஷ்மீர் இளைஞரை ராணுவ ஜீப்பில் கட்டப்பட்டதாகக் காட்டும் காணொளி

"காஷ்மீரில், சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான கைகலப்பு மற்றும் மோதல் தொடர்பான காணொளியை பார்த்த பின் ஏற்படும் கோபக்கனலை புரிந்து கொள்கிறேன். ஆனால், ராணுவ ஜீப்பில் கட்டப்பட்டிருக்கும் இளைஞர்களை பார்த்தும் மக்களுக்கு சீற்றம் எழவில்லை என்பது தான் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது".

"காஷ்மீரிகளை சித்ரவதை செய்யும் காணொளியை பார்த்தும் கோபம் வரவில்லையா?"

பட மூலாதாரம், Getty Images

"ஜீப்பின் மீது கல்லெறி விழக்கூடாது என்பதற்காகத்தான் இளைஞர் ராணுவ ஜீப்பின் முன்னால் பிணைக்கப்பட்டிருக்கிறாரா? இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது".

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை காலை, தனது டிவிட்டர் செய்தி மூலம் எழுப்பிய கேள்விகள்தான் இவை.

இளைஞர்கள் ஜீப்பில் பிணைக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொளி காட்சி குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

சினார் கார்ப்ஸ் படை வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "ராணுவ ஜீப்பில் இளைஞர்கள் பிணைக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொளியின் உள்ளடக்கம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், TWITTER

இந்திய ராணுவத்தின் டிவிட்டர் ஹேண்டிலில் இருந்து இந்தப் பதிவு மறுபதிவு (மறு டிவீட்) செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தொடர்பாக எழும் கேள்விகளுக்கு பதிலாக, இளைஞர்கள் மத்திய ரிசர்வ் போலீசாரை அவமானப்படுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

எனினும், உமர் அப்துல்லாவின் காணொளி காட்சியின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த காணொளியை பகிர்வதற்கு முன்னதாக, உமர் அப்துல்லா பகிர்ந்துள்ள மற்றொரு காணொளியில், ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் ஒருவர் கட்டப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், TWITTER

"காஷ்மீர் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்படும் இந்த காணொளியை பாருங்கள், எத்தனை தொலைகாட்சி சேனல்கள் இதைக் காட்டுகின்றன" என்று கேள்வி எழுப்புகிறார் உமர் அப்துல்லா.

உமர் அப்துல்லாவின் கருத்துக்கு உடன்படும் பலர், ராணுவத்தினரின் தாக்குதல் தொடர்பான பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

தேர்தலுக்கு பிறகு பல இடங்களில் உள்ளூர் மக்களிடம் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக வெளியேற இளைஞர்கள் உதவியிருக்கும் காட்சிகள் சிலர் பகிர்ந்திருக்கும் காணொளிகளில் இடம்பெற்றுள்ளன.

இருந்தபோதிலும், நடிகர் அனுபம் கெர் இந்த காணொளிகள் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறார்.

பட மூலாதாரம், TWITTER

அமைதியை விரும்பும் ஒருவனாக வீரர்களின் கட்டுப்பாட்டை பாராட்டினாலும், எங்கள் இளைஞர்களிடம் மோதவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனுபம் கெரின் ஒரு காணொளியில், கஷ்மீரில் இளைஞர்களுக்கு நடந்திருப்பது பொருத்துக் கொள்ளக்கூடியதில்லை என்று கூறுகிறார்.

இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் அனுபம் கெர், மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், இதற்கு பதில் சொல்லவேண்டும் என்கிறார்.

காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அனுபம் கெர், "காஷ்மீரில் ஆயுதம் ஏந்திய இளைஞர்களுக்கே இந்த நிலைமை என்றால், 27 ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுதம் இல்லாத காஷ்மீர் பண்டிட்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்களே அனுமானிக்கலாம்" என்கிறார்.

காணொளி: இரண்டு மாத காஷ்மீர் வன்முறையை திசை மாற்றும் ஊரி தாக்குதல்

காணொளிக் குறிப்பு,

இரண்டு மாத காஷ்மீர் வன்முறையை திசை மாற்றும் ஊரி தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்