ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பொருட்களுக்காக மோதல்

சிவகங்கை மாவட்டம் எம். புதூரில் இன்று ஞாயிற்றுகிழமை பிரமாண்ட அரங்கம் அமைத்து நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், பரிசுகளை பெறுவது தொடர்பில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பொருட்களுக்காக மோதல்

பட மூலாதாரம், Getty Images

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள வந்த அனைத்துக் காளைகளுக்கும் பரிசு வழங்கவேண்டும் என்பது வழக்கமான விதிமுறை என கூறப்படுகிறது.

ஆனால் தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் மற்றும் சிவகங்கை ஜல்லிக்கட்டு குழு சார்பில் நடத்தப்பட்ட இன்றைய போட்டியில் கலந்துக்கொண்ட குறிப்பிட்ட காளைகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அரங்கத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை, நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வந்திருந்தவர்கள் அபகரிக்க முயற்சி செய்த்தாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதன் விளைவாக பரபரப்பான சூழல் நிலவியது.

இதற்கிடையே இன்று இந்த நிகழ்ச்சியை காண வந்திருந்த திருநாவுக்கரசர் என்ற கல்லூரி மாணவர், மாடு முட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதால் காயம் அடைந்ததாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்