சட்டமன்றத்தைக் கூட்ட சபாநாயகரிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சபாநாயகர் தனபாலைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook

தலைமைச் செயலகத்தில் இன்று சபாநாயகரைச் சந்தித்த மு.க. ஸ்டாலின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்த சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று மனு அளித்தார்.

அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

மென்மையான முறையில் இந்தியை திணிக்கும் பாஜக: திமுக எம்.பி. இளங்கோவன்

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின், "நாங்கள் முதல்வரைச் சந்திக்க வேண்டுமென வெகுநேரம் காத்திருந்தோம். அவர் எங்களை அழைக்கவில்லை. அதனால் புறப்பட்டுவிட்டோம்" என்று தெரிவித்தார்.

தமிழக விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்; மாநிலம் முழுவதும் குடிநீருக்குப் பஞ்சம் நிலவுகிறது; ஆனால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயிருப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

படத்தின் காப்புரிமை Facebook

அ.தி.மு.கவில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, இந்த விவகாரங்கள் அக்கட்சியின் உட்கட்சிப் பிரச்சனை என்று கூறினார்.

ஆனால், ஃபெரா மாஃபியாவும் மணல் மாஃபியாவும் தங்களுக்குள் மோதிக்கொண்டிருப்பதாகவும் இவர்கள் இந்த மாநிலத்தை கெடுத்து நாசம் செய்துவருவதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சசிகலா குடும்பத்தினரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்க முடிவு: அ.தி.மு.க. அமைச்சர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கிய டிஜிடல் உரிமம்

சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்னும் முடிவடையவில்லை என்பதால், அதனை மீண்டும் கூட்டுவது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் இது தொடர்பாக ஆளுனரைச் சந்திக்கப்போவதில்லையென்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இணைப்பு சாத்தியமில்லை: ஓ. பன்னீர்செல்வம்

அமைச்சர்கள் அவசர ஆலோசனை: அதிமுகவில் மீண்டும் திருப்பம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்