நன்றி தலைவா : ரஜினி ரசிகர்களை நெகிழ வைத்த சச்சின் டெண்டுல்கர்

  • 20 ஏப்ரல் 2017

சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர் ஷேவாக் நடித்து அடுத்த மாதம் வெளிவரவுள்ள `சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்` என்ற திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு சச்சின் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் நன்றி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter

ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் அடுத்த மாதம் 26 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கரின் `சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்` என்ற திரைப்படம் இந்தியா முழுக்க வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்தி, மராத்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயணம் மற்றும் ரசிகர்கள் யாரும் அறிந்திராத தனிப்பட்ட வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்களை கொண்ட ஆவணப்படமாக தயாராகியுள்ளது.

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் திரைப்படம் வெற்றிப்பெற அனைவரும் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்` திரைப்படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

ரஜினியின் ட்விட்டுக்கு நன்றி கூறி பதில் ட்வீட் போட்ட சச்சின், 'நன்றி தலைவா. இந்த படத்தை தமிழில் நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்