மோசமான உணவு பற்றி புகார் தெரிவித்த இந்திய சிப்பாய் பணி நீக்கம்

பாகிஸ்தான் எல்லையில், காவல் பணியில் இருக்கும் இந்திய சிப்பாய்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக வீடியோ மூலம் குற்றம் சாட்டிய சிப்பாய், "பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக பணி நீக்கம்" செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை TEJ BAHADUR YADAV

டெஜ் பஹதூர் யாதவ் என்னும் அந்த சிப்பாய் வெளியிட்டிருந்த வீடியோ, எட்டு மில்லியன் பார்வையார்களை பெற்றது; மேலும் அது இந்தியர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியது.

தங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மிக மோசமானதாக இருக்கும் என்பதால் பல சமயங்களில் சிப்பாய்கள் உண்ணாமல் இருந்துவிடுவதாக யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையிட போவதாக யாதவ் தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த யாதவ், ஜனவரி மாதத்தில் கரிப்பிடித்த ரொட்டி, மஞ்சள் மற்றும் உப்புக் கலந்த பயிறு ஆகியவற்றை சுட்டிக் காட்டி இதுதான் சிப்பாய்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

யாதவ் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதற்கும், சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவிட்டதற்கும், இரண்டு அலைப்பேசிகளை வைத்திருந்ததற்கும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தி இந்து செய்திதாளில் வெளியாகியுள்ளது.

ராணுவ இயல்பு நடவடிக்கை விதிமுறைகளுக்கு எதிராக, பணி நேரத்தில் இரண்டு அலைபேசிகளை உபயோகப்படுத்தியுள்ளார் என்றும், சமூக ஊடகங்களில் சீருடையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு விதிகளை மீறிவிட்டார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"யாதவ் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாதவின் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததாகவும், 2010 ஆம் ஆண்டில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு படை இதற்கு முன்னதாக தெரிவித்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்