நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளிலும், நூற்றுக்கணக்கான பச்சைக்கிளிகளுக்கு உணவளிக்கிறார் ராயப்பேட்டையைச் சேர்ந்த "காமிரா மெக்கானிக்" சேகர்.
இயற்கையோடு இணைந்து வாழும் பச்சைக்கிளிகள், பாதுகாப்பாக உணர்வதால் மட்டுமே உணவு உண்பதற்கு இங்கு கூட்டம் கூட்டமாக வருவதாக, உணவளிக்கும் சேகர் கூறுகிறார்.
மிக சிலரின் உதவியுடன் தன் வருமானத்தைக் கொண்டே, தினந்தோறும், இந்த நூற்றுக்கணக்கான பச்சைக்கிளிகளுக்கு உணவளித்து வருகிறார் சேகர்.
கூட்ட நெரிசல் மிகுந்த சந்தை பகுதி அது என்பதால், அவ்வப்போது அச்சப்படும் பச்சைக்கிளிகளுக்கு உடனடியாக உண்ணக்கூடிய உணவுகளையே போடுவதாக உணவளிக்கும் சேகர் கூறுகிறார்.
( காணொளி - சென்னை செய்தியாளர் ஜெயக்குமார் )
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்