திருப்பதிக்கு அருகில் விபத்து: குறைந்தது 15 பேர் பலி

திருப்பதிக்கு அருகில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

திருப்பதியிலிருந்து ஸ்ரீ காளகஸ்தி செல்லும் சாலையில் திருப்பதியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள ஏர்பேடு என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ காளகஸ்தியிலிருந்து திருப்பதியை நோக்கி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி, அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால், மின்சாரம் தாக்கியும் சிலர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் திருப்பதியில் உள்ள எஸ்விஆர் ருயா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்கத்தை கட்டிகளாக மாற்றும் திருப்பதி கோவில்

பணக்கார கோவிலின் புகழ்பெற்ற பிரசாதம்: திருப்பதி லட்டு

இந்த விபத்தில் வேறு பல வாகனங்களும் நொறுங்கியுள்ளன.

தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்