காஷ்மீர் மக்கள் மீது வன்முறை சம்பவங்கள் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

  • 21 ஏப்ரல் 2017

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், காஷ்மீர் மக்கள் மீதான வன்முறைகளும், மிரட்டல்களும் நடைபெறுவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, காஷ்மீரிகளை பாதுகாக்கவேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் மக்களும் இந்தியாவின் குடிமக்கள் தான் என்றும், அவர்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டி, உள்ளூர் மக்கள் அடித்து உதைத்தாக செய்திகள் வெளியானதை அடுத்து மத்திய அமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரபிரதேச மாநிலத்தில் "கல் வீசும் காஷ்மீரிகள்" என்ற பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு சொல்லப்படுகிறது.

காஷ்மீரில் அண்மையில் வன்முறை போராட்டங்களின் போது, இளைஞர்கள் குழுக்கள், கோபத்தில் கற்களை இந்திய பாதுகாப்பு படையினர் மீது வீசி எறிந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்