சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் - ஒரு பட்டியல்

  • 25 ஏப்ரல் 2017
படத்தின் காப்புரிமை CRPF

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட் குழுவினர் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 26 போலிஸார் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இதற்கு முன்பு சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறித்த கால அட்டவணை

சுக்மா தாக்குதல் - 11 மார்ச், 2017

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 11 சி.ஆர்.பி.எஃப் போலிசார் கொல்லப்பட்டனர் மேலும் குறைந்தது ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து பஸ்தர் மாவட்ட போலிஸ் அதிகாரி ஒருவர், சாலையை சரி செய்து கொண்டிருந்த சிஆர்பிஎஃப் போலிஸார் மீது மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

தண்டேவாடா மாவட்டம் 25 மே, 2013

பழங்குடியின தலைவர் மகேந்திர கர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நந்தகுமார் படேல் மற்றும் விதா சரன் ஷகுல் உட்பட 30 பேர் இந்த தாக்குதலில் பலியாகினர்.

தண்டேவாடா மாவட்டம் - 6 ஏப்ரல் 2010

சிஆர்பிஎஃபின் 62 ஆவது பெடாலியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை நடைபெற்றதில் இதுதான் மிகப்பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 75 பலியாகினர்.

தண்டேவாடா மாவட்டம் - 17 மே, 2010

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மாவோயிட்டுகள் நடத்திய கண்ணிவெடிதாக்குதலில் 36 பேர் பலியாகினர்.

இது குறித்த பிற செய்தி

சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி.ஃஎப். போலீசார் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்