காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்; 3 இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொலை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இன்று (வியாழக்கிழமை) காலை இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில், அதிகாரி ஒருவர் உள்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'பதிலடி நடவடிக்கையில் எங்களால் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொல்ல முடிந்தது. அந்தப்பகுதியில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,''என்று ராணுவ பேச்சாளர் கர்ணல் ராஜேஷ் காலிய கூறியுள்ளார்.

இந்த முகாம் குப்வாராவில் ராணுவ முகாம்களைக் கொண்ட ஓர் நகரில் அமைந்துள்ளது.

காஷ்மீர் பதற்றம்: சமூக வலைத்தளங்கள் முடக்கம்

காஷ்மீரின் “கல்வீசும் பெண்கள்” (புகைப்படத் தொகுப்பு)

காஷ்மீர் மக்கள் மீது வன்முறை சம்பவங்கள் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

கடும் ராணுவ பாதுகாப்பு கொண்ட கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வடகோடியில் அமைந்துள்ள மாவட்டம்தான் குப்வாரா.

ஏப்ரல் 9 ஆம் தேதியிலிருந்து இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அன்றைய தினம் நாடாளுமன்ற தொகுதி ஒன்றின் இடைத்தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

வாக்குப்பதிவு வெறும் ஏழு சதவீதமாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த வாரங்களில் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நிலைமை பதற்றமாகவே உள்ளது. இணைய சேவைகளை அரசாங்கம் துண்டித்த நிலையில் பின்னர் சமூக வலைத்தளங்களுக்கு தடை பிறப்பித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

"காஷ்மீரிகளை சித்ரவதை செய்யும் காணொளியை பார்த்தும் கோபம் வரவில்லையா?"

காஷ்மீர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்