சிறு நகரங்களை இணைக்கும் உடான் விமான சேவை -10 தகவல்கள்

  • 27 ஏப்ரல் 2017

இந்தியாவின் சிறு நகரங்களை இணைக்கும் விமான சேவையைத் தரும், 'உடான்' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கிவைத்தார்.

படத்தின் காப்புரிமை AIRINDIA

உடான் திட்டம் குறித்த பத்து முக்கிய தகவல்கள்:

1)சிறு நகரங்களை இணைக்கும் விமான வசதி திட்டம் - உடான்

2)குறைந்த கட்டணம் - ரூ.2,500 செலுத்தி விமான பயணம் செல்லும் 'உடான்'திட்டத்தை பிரதமர் மோதி தொடங்கிவைத்துள்ளார்.

3)இந்தியாவின் 13 நகரங்களில் உள்ள அதிக பயன்பாட்டில் இல்லாத மற்றும் குறைந்த பயன்பாட்டில் உள்ள 44 விமான நிலையங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது

4)சிறுநகரங்களில் இருந்து குறைந்த பட்சமாக 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருநகரங்களுக்கு செல்லும் வசதி

5) 500 கிலோமீட்டருக்கு மேல் பயணதூரம் அதிகரித்தால், கட்டணம் அதிகரிக்கப்படும்.

6)தமிழகத்தில் செப்டம்பர் 2017ல் உடான் விமான சேவை தொடங்குகிறது

7)தமிழகத்தில் சேலம், ஓசூர், நெய்வேலி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை செல்லும் வசதி

8)ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஏர் டெக்கான், ட்ரூ ஜெட், அலையன்ஸ் ஏர் ஆகிய நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன.

9)ஒன்பது முதல் 40 டிக்கெட்கள் வரை ஒரு பயணி முன்பதிவு செய்யலாம்.

10) உடான் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானத்தின் 50 சதவீத இருக்கைகள் குறைந்தபட்ச விலைக்கு வழங்கப்படும். பிற இருக்கைகள் அப்போதைய சந்தை விலைக்கு விற்கப்படும்.

இவையும் படிக்கலாம்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி

இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்