100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப்

  • 30 ஏப்ரல் 2017

அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்

பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுடனான இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 1981-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.

இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பொருளாதார வளர்ச்சி, ஆனால் மதுவை நம்பிய நிதிநிலை

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

வடகொரிய கடலில் அமெரிக்காவின் புதிய விமானந்தாங்கிக் கப்பல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்