முரட்டு நோயாளிகளிடமிருந்து தப்ப டாக்டர்களின் புதிய யுத்தி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றில், நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கு வன்முறையில் ஈடுபடும் நோயாளிகள் மற்றும் உறவினர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மாதத்திலிருந்து தற்காப்புக்கலை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

பாட வகுப்புகள் தற்காப்பு கலைகளில் சாம்பியன்களாக விளங்குபவர்களால் தலைநகர் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக்கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் தினமும் சொல்லித்தரப்பட உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கடந்த ஆண்டு மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, சுமார் 40 சதவிதத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்குதல்களை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் இட நெருக்கடி மற்றும் சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆகியன நோயாளிகளின் கோபத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள் :

85 வயதில் இளவரசியான அழகிய விஞ்ஞானி!

‘தேசிய பாதுகாப்புக் கொள்கையில் மோதியை விட இந்திரா சிறந்தவரா?’

பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்