தூய்மையான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்து 6ம் இடத்திற்கு சரிந்தது திருச்சி

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 2014ல் இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி இந்த ஆண்டு ஆறாம் இடத்தை அடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை `

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'ஸ்வச் சர்வேகன்' என்ற பெயரில் இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களும், அதன் தூய்மை நிலையை கணக்கில் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டியல் வெளியிட்டு வருகிறது.

தலைநகர் டெல்லி முதல் லட்சத்தீவில் உள்ள கவரத்தி நகரம் என 400க்கும் மேற்பட்ட நகரங்களின் தூய்மை பற்றிய தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி நகரம் ஆறாம் இடத்திற்கு சரிந்துள்ளது என மத்திய நகர அபிவிருத்தி அமைச்சு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான சென்னை 235வது இடத்திலும், கோவை 16ம் இடத்திலும், மதுரை 57வது இடத்திலும், திருநெல்வேலி 193வது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில், தமிழகத்தை சேர்ந்த நகரங்களில், திருச்சி தவிர வேறு எந்த நகரங்களும் இடம்பெறவில்லை.

இந்திய அளவில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்தூர் நகரம் முதல் இடத்திலும், போபால் நகரம் இரண்டாம் இடத்திலும், ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் மூன்றாவது இடத்தில் உள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்