எலிகள் மதுபானம் குடிக்குமா ; கேலிக்கு உள்ளான பீஹார் போலீஸ்

எலிகள் மதுபானம் குடிக்குமா ; கேலிக்கு உள்ளான பீஹார் போலீஸ்

பீஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறியவர்களிடம் கைப்பற்றப்பட்ட சுமார் 9 லட்சம் லிட்டர் மதுவில் பெருமளவை எலிகள் குடித்துவிட்டனவாம்!

பீஹார் போலீசார்தான் இதைச் சொல்கிறார்கள்.

கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள் காவல் துறை குடோன்களிலிருந்து காணாமல் போனது குறித்து உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் மாநில போலீஸார் நடத்திய கூட்டமொன்றில், கைப்பற்றப்பட்ட பாட்டில்களில் சில அழிக்கப்பட்டுவிட்டதாகவும், மீதமிருந்தவைகளை மது விரும்பும் எலிகள் குடித்து தீர்த்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

பீஹார் போலீஸாரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்