நீங்கள் விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்படுமா? தெரிந்துகொள்ளுங்கள் 10 புதிய தகவல்களை!

  • 6 மே 2017
படத்தின் காப்புரிமை Google

இந்தியாவில் விமான பயணத்தின் போது தவறாக நடந்துகொள்பவர்கள் குறித்த புதிய விதிகளை மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த 10 முக்கியத் தகவல்களை பார்ப்போம் :

1. உடல் சைகைகள், வாய்மொழி துன்புறுத்தல் மற்றும் நிதானமில்லாத போதை ஆகியன சீர்குலைக்கும் நடத்தையில் முதல் நிலையாகும்.

2. பிடித்து தள்ளுவது, எட்டி உதைத்தல் மற்றும் பொருத்தமற்ற முறையில் தொடுவது அல்லது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட உடல் ரீதியான தவறான நடத்தைகள் இரண்டாம் நிலையாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

3. உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடத்தை, விமான இயக்க அமைப்புமுறைக்கு சேதம் விளைவிப்பது, கழுத்தை நெரிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, விமானியின் அறைக்குள் அத்துமீறி செல்வது அல்லது அத்துமீற முயற்சிப்பது ஆகியன மிக உயர் நிலையாகும்.

’பாலூட்டும் தாய் என்பதை விமான நிலையத்தில் நிரூபிக்க ஜெர்மனி போலிசார் நிர்பந்தம்’

4. முதல் நிலையின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் பயணிகளுக்கு விமானத்தில் பறக்க மூன்று மாதங்கள் வரை தடைவிதிக்கப்படும்.

5. இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் பயணிகள் 6 மாதங்கள் வரை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

6. இந்த தடையானது இரண்டு ஆண்டுகள் வரை உயர்த்தப்பட்டு அதிகபட்சமாக வாழ்நாள் தடை கூட விதிக்கப்படலாம்.

சில ஏர் இந்தியா விமான சேவைகளில் பெண்களுக்கான இருக்கை ஒதுக்கீடு

7. மீண்டும் மீண்டும் குற்றமிழைக்கும் பயணிகளுக்கு இந்த தடை உத்தரவுகள் இரட்டிப்பாகும்.

8. அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களும், ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் மற்றும் மற்றொரு விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி, நுகர்வோர் அல்லது பயணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

9. விமான பணியாளர்கள் பதிவு செய்யும் புகாரை 10 தினங்களுக்குள் இந்த குழு விசாரித்து, சம்பந்தப்பட்ட பயணி குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை தீர்மானித்து மூன்று நிலைகளில் அவர் எந்த நிலை என்பதை அறிவிக்க வேண்டும்.

10. விசாரணைக்கு உட்படுத்தப்படும் அந்த பயணி 10 தினங்களுக்கு புகார் தெரிவித்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கலாம்:

'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' கேள்வி உருவான கதை: ராஜமௌலி பேட்டி

ஆதார்: உங்கள் வீட்டுக்குள் ஊடுருவிய உளவாளியா, காவல்காரனா?

கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல அமெரிக்கா சதி - வடகொரியா பகீர் குற்றச்சாட்டு

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்