உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2

எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பாகுபலி 2 பெற்றுள்ளது.

'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' கேள்வி உருவான கதை: ராஜமௌலி பேட்டி

''நடிகனாக இருப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத தமிழனாக இருப்பதே எனக்கு பெருமை''

திரைப்பட துறையை சேர்ந்த ரமேஷ் பாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ''பாகுபலி 2 திரைப்படம் இந்தியளவில் 800 கோடி ரூபாயும், வெளிநாட்டில் 200 கோடி ரூபாயும் வசூல் செய்து 1,000 கோடி ரூபாயை வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம்'' என்று கூறியுள்ளார்.

இந்தி பாகுபலி 2 வசூல் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திரைப்பட விமர்சகரான தரன் ஆதர்ஷ், ''படம் வெளியாகி இரண்டாம் வார இறுதியில் 300 கோடி ரூபாய் வசூலை பாகுபலி தாண்டியிருக்கும் '' என்று கூறியிருந்தார்.

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

பாகுபலி வெற்றியின் பின்னணியில் இருப்பது யார்?

ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்காவிலும் பாகுபலி 2 திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளதாக தரன் ஆதர்ஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் அனைவரும் ட்விட்டர் மூலமாக பாகுபலி 2 திரைப்படத்தின் இயக்குநர் ராஜமெளலிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கட்டப்பாவோடு மீண்டும் கைகோர்ப்பாரா? ராஜமௌலி பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தேவசேனாவாக நடித்ததில் மிகப்பெரிய சவால் எது? அனுஷ்கா பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்