கறுப்பான, பருமனான பெண்கள் மீது ஏன் இவ்வளவு வேறுபாடு?

'என்ன? கேக் பிடிக்காதா? உன்னைப் பார்க்க அப்படி தெரியவில்லையே!' பிறந்தநாள் விழாவில் பருமனான பெண் இந்த கேள்வியை எதிர்கொள்வது இயல்பானதே.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விளம்பர பொம்மைப் போன்ற ஒல்லியான உடல் அளவை கொண்டிருந்தால், அப்பெண்ணுக்கு மாதவிடாய் வருவதற்கான வாய்ப்பே இருக்காது

தனது அளவிற்கான உடையை விற்பனையாளரிடம் கேட்கும் பருமனான பெண்ணுக்கு ஜிம்முக்கு செல்லும் அறிவுரை மட்டுமே இலவசமாக கிடைக்கும்.

முகத்தை வெண்மையாக்கும் அழகுசாதன கிரீமை பயன்படுத்துவதை பெரிதாக பேசிய காலம் மாறி, இப்போதோ உடலின் பிற பாகங்களை வெண்மையாக்கும் அழகு சாதனப் பொருட்களும் சந்தையில் வந்துவிட்டதே!

உடல் பருமன் காரணமாக பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாவதாக 24 வயது ஆகாங்ஷா சொல்கிறார் ''நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது, வகுப்பறைக்கு வெளியே நின்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற எனது ஆசிரியை, நான் குண்டாக இருப்பதற்கான காரணம் தெரிந்துவிட்டதாக கூறிச் சிரித்தார். என்னைச் சுற்றி நின்றிருந்த சக மாணவர்கள் அனைவரும் கொல்லென்று சிரித்ததும், மிகவும் அவமானமாக உணர்ந்தேன். நான் அதீத உணவு பழக்கத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தேன்''.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption ஆகாங்ஷா

ஆகாங்ஷா மேலும் சொல்கிறார், ''குழுவாக புகைப்படம் எடுக்கும்போது, வரிசையின் கடைசியில் நிற்கச் சொன்னார் பள்ளியின் தலைமை ஆசிரியை. நான் குண்டாக இருப்பதால், குழுவின் நடுவில் இருந்தால் நன்றாக இருக்காதாம்''! ''ஆனால் இப்போது இதைப்போன்ற கேலி, குத்தல் பேச்சுகளுக்கு நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம்.''

உடல்வாகை கேலி செய்வது

உடல்வாகு அல்லது நிறத்தை வைத்து கேலி செய்வது இன்று இணையதளத்திலும் வாடிக்கையான வேடிக்கையாகிவிட்டது. பெண்களின் புகைப்படங்களை வைத்து கேலிக்காக உருவாக்கப்படும் மீம்ஸ்களில், 'அழகற்றவர்கள்' என குறிப்பிட பயன்படுத்தப்படுவது 'கறுப்பு', 'பருமன்', பெண்களைத் தான். பிறகு அதை டேக் செய்து நண்பர்களுக்கு அனுப்பி, திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று கேலி செய்வார்கள். பிறகு தொடங்குகிறது உடல்வாகை வைத்து கேலி செய்யும் வேடிக்கை விளையாட்டு. ஆனால் இது உண்மையில் சரியான மனப்போக்கா?

பருமனான அல்லது கறுப்பு நிற பொம்மையுடன் நீங்கள் விளையாட விரும்புவீர்களா? அந்தத் தோற்றத்தில் இருக்கும் எத்தனை விளம்பர பொம்மைகளைப் பார்த்திருப்பீர்கள்? 'ஈட்டிங் டிஸாடர்' என்ற பத்திரிகை அதீத உணவு பழக்கம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

பொதுவாக கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பொம்மை உருவத்தை ஒத்து மக்களின் தோற்றம் இருந்தால், அவர்கள் மருத்துவ ரீதியில் ஆரோக்கியமற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அதுமட்டுமல்ல, விளம்பர பொம்மைகள் போன்ற உடல்வாகுடன் இருப்பதாக நினைப்பதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதே. உண்மையில் ஒரு பெண், விளம்பர பொம்மைப் போன்ற ஒல்லியான உடல் அளவை கொண்டிருந்தால், அப்பெண்ணுக்கு மாதவிடாய் வருவதற்கான வாய்ப்பே இருக்காது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதேபோல் விளம்பரத்தில் பயன்படுத்தபடும் ஆண் பொம்மைகளை போன்ற உடல்வாகு கொண்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு இருக்கும். பிரிட்டனில் இரண்டு நகரங்களில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பர பொம்மைகளை ஆராய்ந்த ஆய்வாளர்களின் முடிவு இது.

அளவுக்கு அதிக பருமனாக இருப்பது நோய்க்கான அறிகுறி என்றால், மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்தால் ஆரோக்கியமானதா என்ன? இல்லவே இல்லை. மிகவும் ஒல்லியான தோற்றம் என்பது, மனநல சிக்கல்கள் மற்றும் அசாதாரண உணவு பழக்கங்கள் உருவாகுவதற்கு முக்கியமான காரணம் என்பதை விளக்கும் ஆதாரங்கள் இருப்பதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் எரிக் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார்.

இளம் வயதினர் அதிலும் குறிப்பாக பதின்ம வயதினர்தான், உடல்வாகை வைத்து கேலி செய்வதால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் என்று கூறும் மனநல மருத்துவர் நீது ராணா, ''உடல்வாகை கேலி செய்வதால் மன உறுதி குலைந்துபோகிறது. அது கேலியும் கிண்டலும் உடல்வாகுடன் நின்றுவிடாமல், பேசும்முறைகளை கொண்டும் தொடர்கிறது''.

ஒருவித குறிப்பிட்ட விதமான உடல்வாகை பெறவேண்டும் என்ற அழுத்தம் பல நாட்டுப் பெண்களிடையே இருக்கிறது. இதனால், எனுரேசிஸ் (enuresis)எனப்படும் சிறுநீர் தானாக கழியும் நோய்க்கும் பெண்கள் ஆளாகின்றனர்.

மனவெழுச்சிக் குழப்பம் இல்லையே?

அனொரெக்ஸியா (Anorexia) என்பது, உடல் எடையை குறைப்பதற்காக சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகும், சிலர் உணவை சாப்பிடாமலேயே இருப்பார்கள், இது மரணத்திலும் முடியலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

திரைப்படங்களிலும், தொலைகாட்சி நாடகங்களிலும், பருமனாக இருப்பவர்களை முட்டாளாக காட்டுகின்றார்கள். சிறுவர்களுக்கான கார்ட்டூனும் இதற்கு விதிவிலக்கு இல்லை. 'டோரிமான்' இன் ஜியானோ அல்லது 'கித்ரேத்ஸு' வில் வரும் வயதான கொரில்லாவாக இருக்கட்டும். இந்த இரண்டு கதாபாத்திரங்களுமே பருமனானவையாகவும், மந்தபுத்தி கொண்டவைகளாகவும் காட்டப்பட்டுள்ளன.

நகைச்சுவைக்காக பருமனாகவும், கறுப்பாகவும் காட்டும் திரைப்படங்களையும், நகைச்சுவை நாடகங்களும் பொதுவாகவே அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் பலவிதமான கேள்விகளும், சமூக போதனைகளும் இருக்கிறது.

இங்கே நாம் எழுப்பும் முக்கியமான கேள்வி இது தான்… இயல்பான மனிதர்களின் உருவங்களில் விளம்பர பொம்மைகளை பார்ப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நமது குழந்தைகள் விளையாட கறுப்பான, குண்டான பொம்மைகளை வாங்குவோமா?

பிற முக்கிய செய்திகள் :

மோதியிடம் உதவி கோரும் வங்கதேச பாலியல் தொழிலாளி

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி

வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்-3

பீர் தயாரிக்க 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்