புதிய விமானங்களின் சோதனையை தாற்காலிகமாக நிறுத்திய போயிங்

  • 12 மே 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போயிங் 737 மேக்ஸ் விமானம்

போயிங் நிறுவனம் தனது புதிய 737 மேக்ஸ் விமானத்தின் என்ஜினில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளால் அதன் சோதனையை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு 737 மேக்ஸ் விமானத்தின் முதல் டெலிவரியை செய்யவிருந்த நிலையில் அதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே அமெரிக்க விமான தயாரிக்கும் நிறுவனமான போயிங் இந்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மாதத்திற்குள் மேக்ஸ் விமானங்களை அதன் வாடிக்கையாளர்களிடம் டெலிவரியை தொடங்க வகுக்கப்பட்ட திட்டத்துடன் பயணிப்பதாக போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் மற்றும் சீனாவின் ஷான்டூங் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் போயிங்கிடம் விமானத்தை வாங்கவுள்ள நிறுவனங்களில் அடங்கும்.

ஆளில்லா விமானம் மூலம் எடுத்த மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்

கடத்தப்பட்ட பயணிகள் விமானம் ( புகைப்படத் தொகுப்பு)

இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் சுமார் 205 புதிய விமானங்களை போயிங்கிடம் வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 22 பில்லியன் டாலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் மேக்ஸ் 737 விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 2018 ஆம் ஆண்டு வழங்கப்படும் என போயிங் தெரிவித்துள்ளது.

காணொளி: அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?

இந்த செய்திகளிலும் நீங்கள் ஆவர்வம் காட்டலாம்

அந்த பெயரை கேட்ட போது கேவலமாக உணர்ந்தேன் : போப் ஃபிரான்சிஸ்

சீனா தயாரித்த முதலாவது பயணியர் விமானம் வெள்ளோட்டம்

காணொளி: சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்