சென்னை மாநகர ஆணையர் மாற்றம்

  • 13 மே 2017

சென்னை பெருநகர ஆணையராக இருந்த கரண் சின்ஹா மாற்றப்பட்டு, புதிய ஆணையராக ஏ.கே. விஸ்வநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து கரண் சின்ஹா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.கே. விஸ்வநாதன், ஊர்க்காவல் படையின் கூடுதல் கமாண்டண்டாக இருந்துவந்தார். அதற்கு முன்பாக கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையராக விஸ்வநாதன் பதவி வகித்திருக்கிறார்.

கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த ஈ.டி. சாம்ஸன், சென்னை நகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அப்போதைய ஆணையராக இருந்த ஜார்ஜ், ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுபவார் என தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

இதையடுத்து மார்ச் 25ஆம் தேதியன்று ஜார்ஜ் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, புதிய ஆணையராக கரண் சின்ஹாவைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு ஆணையரை மாற்றியுள்ளது.

சென்னை நகர ஆணையர் உட்பட 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி

தமிழகத்தில் 10. பிளஸ் 2 வகுப்புகளுக்கு ரேங்க் முறை ரத்து

உதய் திட்டத்தில் இணைந்தது தமிழ்நாடு

தமிழ்நாட்டின் `தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்`

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்