சென்னையின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

  • 14 மே 2017

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரை செல்லும் நகரின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை சென்னை கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரை செல்லும். இந்த சுரங்கப்பாதை வழித்தடத்தில் 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதை ரயில் சேவை 7.40 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும்.

இன்று காலை நடைபெற்ற சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவைக்கான தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான பகுதிகளை இணைக்கும் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கப்பட்டது.

பின்னர். சென்னை விமான நிலையத்தை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் துவக்கி வைத்தார்.

இதையும் படிக்கலாம் :

மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை

மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர்

'நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது' : பாரீஸ் ஜாக்சன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்