போக்குவரத்து ஊழியர் போராட்டம்: எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மீது எஸ்மா சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக இதனை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட வேண்டுமெனக் கோரியும் பணிக்கு வரும் ஊழியர்களைத் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியும் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் இன்று வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த முரளிதரன், சேஷய்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊழியர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்ப வேண்டுமென உத்தரவிட்டது; பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதனை உறுதிசெய்து தலைமைச் செயலர் மனுத் தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிமன்றம், வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில், போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் பங்கேற்று ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

இது குறித்த பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்