குல்புஷன் ஜாதவை தூக்கிலிட இந்தியா தடைபெற்றது எப்படி? 8 முக்கிய அம்சங்கள்

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் குல்புஷன் சுதிர் யாதவை தூக்கிலிடுவதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா இடைக்கால உத்தரவு பெற்றது எப்படி? எட்டு முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption இந்தியாவின் வாதங்களை சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது

குல்புஷன்ஜாதவைத் தூக்கிலிட பாகிஸ்தானுக்குத் தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து பிபிசியிடம் உரையாடிய சர்வதேச சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவரான நரிந்தர் சிங், இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

படத்தின் காப்புரிமை INTERNATIONAL COURT OF JUSTICE
Image caption குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதிட்டது
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே சர்ச்சை நிலவி வருவதால், தங்களுக்கு இந்த வழக்கை விசாரிக்க உரிமை உள்ளது என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.
  • 2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறி குல்புஷன் ஜாதவ் விஷயத்தில் இந்தியாவுக்கு தூதரக சேவை வழங்கும் அனுமதியை பாகிஸ்தான் அளிக்கவில்லை. அதனால், இந்த உரிமையை சர்வதேச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது.
  • குல்புஷன் ஜாதவ் தூக்கிலிடப்படுவதற்கு எதிராக மனு செய்ய இந்தியாவுக்கு குறைவான காலமே இருந்தது.
  • குல்புஷன் ஜாதவ் வழக்கு தொடர்பாக பாகிஸ்தானின் நிலை தெளிவாகவும், நிலையாகவும் இல்லாததால், மோதி அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடியது.
  • இந்த தீர்ப்புக்கு பிறகு பாகிஸ்தானின் அணுகுமுறை மாறலாம். அதன் அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
  • குல்புஷன் ஜாதவ் மீது எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கக்கூடாது. இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வது பாகிஸ்தானுக்கு அவசியமாகிறது.
  • இந்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்னவென்பதை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
  • குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை சரியா, தவறா என்பது குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்னமும் முடிவுசெய்யவில்லை.

இது குறித்த பிற செய்திகள்:

குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை

பாகிஸ்தானில் "இந்திய உளவாளி" கைது; இந்திய அரசு மறுப்பு

இந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்