ஜார்க்கண்ட் : குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகிக்கப்பட்ட 6 பேர் அடித்து கொலை

படத்தின் காப்புரிமை RAVI PRAKASH
Image caption குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகிக்கப்பட்ட 6 பேர் அடித்து கொலை

இந்தியாவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில், குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல் தொடர்பாக வதந்திகள் நிலவி வருவதையடுத்து 6 பேரை மக்கள் கூட்டம் ஒன்று கொன்றுள்ளது.

வியாழக்கிழமை காலை செராய்கெலா மாவட்டத்தில் மூன்று பேர் அடித்து கொல்லப்பட்டனர். பின் அதே நாளில், மாலை வேளையில் ஜம்ஷெட்பூர் மாவட்டத்தில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

''இந்த பகுதிகளில் குழந்தைகளை கடத்தும் கும்பல் ஒன்று மிகவும் தீவிரமாக இயங்கி வருவதாக பரவும் வதந்திகள் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது,''என்று பிபிசி இந்தியிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரு வழக்குகளிலும் இதுவரை எந்த சந்தேக நபர்களையும் போலீஸார் கைது செய்யவில்லை.

வதந்திகள் எப்படி, எவ்வாறு பரவ ஆரம்பித்தன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

ஆனால், மாநில காவல்துறையை சேர்ந்த பேச்சாளர் ஆர்கே மாலிக், கடத்தல் கும்பல் குறித்து பொதுமக்கள் அதிகரித்து வரும் அளவில் கவலைப்பட ஆரம்பித்தனர் என்று கூறியுள்ளார்.

''அவர்களுக்கு அடையாளம் தெரியாத யாரையும் குழந்தை கடத்துபவர்கள் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்'' என்றார் அவர்.

செராய்கெலாவில் கும்பலை தடுத்து நிறுத்த முயற்சித்த காவலர்கள் காயமடைந்திருப்பதாக மாலிக் மேலும் தெரிவித்தார்.

பிற சுவாரஸ்ய செய்திகள் :

மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் - ஆய்வு

நல்ல தலைவர்கள், ஆனால் அமைப்பு கெட்டுப்போயிருக்கிறது - ரஜினிகாந்த்

ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: ஓ.பி.எஸ்

714 கோடி ரூபாய்க்கு விலைப்போன ஓவியர் ஷான் மிஷெலின் படைப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்