இந்திய சந்தைக்கான கார்களை தயாரிப்பதை நிறுத்தும் ஜெனரல் மோட்டார்ஸ்

  • 19 மே 2017

இந்திய சந்தைக்கான கார்களை தயாரிப்பதை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2017ம் ஆண்டின் இறுதியில் நிறுத்திவிடப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் செவ்ரோலெ பிராண்ட் கார்களை விற்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பராமரிப்பு சேவைகளைத் தொடர்ந்து அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் ஆலை, வெளிநாட்டுச் சந்தைகளுக்கு, குறிப்பாக மத்திய மற்றும் தென் அமெரிக்க பிராந்தியங்களுக்கான கார்களை தொடர்ந்து தயாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது .

உலக அளவிலான வணிக மறு கட்டமைப்பின் ஒரு பகுதியாக, இதே போன்ற திட்டங்களை ஜெனரல் மோட்டார்ஸின் தென் மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்க சந்தைகளுக்கும் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு கார்களை விற்பதை நிறுத்தவுள்ளதாகவும், அங்குள்ள தனது தயாரிப்பு ஆலையை இசுசூ மோட்டார்ஸ் நிர்வாகத்திற்கு விற்கவுள்ளதாகவும் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கிழக்கு ஆப்பிரிக்க நடவடிக்கைகளில் 57.7 சதவீத பங்குகளை, இசுசூ நிறுவனம் வாங்கும் என்றும் , நிர்வாகக் கட்டுப்பாடும் அதில் அடங்கும் என்றும் கருதப்படுகிறது.

கணிசமான சேமிப்பை நோக்கமாகக் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளை இந்த நிறுவனம் எடுத்துவருகிறது.

''இந்த நடவடிக்கைகளின் மூலமாக, வருடாந்திர சேமிப்பாக, சுமார் 100 மில்லியன் டாலர்கள் (77மில்லியன் பவுண்ட்கள்) பணத்தை ஜி எம் நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும் 2017ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 500 மில்லியன் டாலர்களை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்ற ஜி எம் நிறுவனத்தின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

2020ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வாகன தயாரிப்பு சந்தையாக இருக்கும் என்று வெளியாகியுள்ள ஊகங்களின் பின்னணியில் ஜி எம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆனால் இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்து வரும் ஏற்றுமதியில் நம்பிக்கை வைத்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவில் எங்களின் ஏற்றுமதி மும்மடங்காக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியா மீது எங்கள் கவனம் தொடரந்தும் இருக்கும்,'' என செய்தியறிக்கையில் ஜி எம் நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஸ்டீபன் ஜேக்க்கி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தனது உள்நாட்டு இருப்பை அதிகரிக்க ஜிஎம் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய திட்டம் தீட்டியிருந்தது. ஆனால் மார்ச் 2017ல் நிறைவடைந்த நிதியாண்டில் விற்பனை புள்ளி விவரங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைந்து வீழ்ச்சி அடைந்தது.

பிற செய்திகள்:

'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

திராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை`

'ஏமாற்றங்களுக்கிடையிலும் முஸ்லீம்களின் தொடரும் திராவிட ஆதரவு'

தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய மந்திரி ஆய்வு எழுப்பிய அரசியல் சர்ச்சை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்