காஷ்மீரில் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்

காஷ்மீரில், இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பாகிஸ்தான ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption காஷ்மீரில் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுத உதவி செய்து வருவதாக இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் அஷோக் நரூலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை குறைத்து, உள்ளூர் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம், தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எப்போது தாக்கப்பட்டது என்று குறிப்பிடாத அஷோக் நரூலா, "அண்மையில், மிக அண்மையில்" என்று மட்டுமே குறிப்பிட்டார்.

ஆனால் தன் நாட்டு ராணுவத்தின் எந்த தளமோ, முகமோ தாக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.

நவ்ஷெரா பிரிவில் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே பாகிஸ்தானிய ராணுவ நிலைகள் அழிப்பதைக் காட்டும் பதிவை இந்திய ராணுவ வெளியிட்டது.

இந்தியா சொல்வது உண்மையல்ல என்று உடனடியாக நிராகரித்த பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜென்ரல் ஆசிஃப் கஃபூர், இது தவறான செய்தி என்று கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

காஷ்மீர் பிரச்சனை உட்பட பல பிரச்சினைகளால் இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறியிருக்கிறது.

இந்திய நிர்வாகத்தின்கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வன்முறை அதிகரித்துள்ளதற்கு பாகிஸ்தானின் தூண்டுதல் நடவடிக்கைகளே காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டுகிறது.

இந்து மத சார்பு கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் அரசு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, பாகிஸ்தான் மீதான நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியுள்ளது.

முன்னதாக, ஆயுதப்படைகளின் மீது துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் மற்றும் படைவீரர்கள் மீது கற்களை வீசி எறிந்த பொதுமக்களும் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி, கூறியிருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்தியா அறிவித்திருப்பது இது முதல் தடவை அல்ல. கடந்த செப்டம்பர் மாதம் துல்லியத் தாக்குதல் நட்த்தியதாக இந்தியா கூறியதை, அப்போதும் பாகிஸ்தான் நிராகரித்தது.

பிற செய்திகள் :

3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டு கால அதிமுக ஆட்சி

பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி

சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்