சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசாமி செவ்வாய்க்கிழமையன்று காலமானார்

66 வயதான சந்திரசாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுடன் நெருக்கமாக இருந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்திரசாமியிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் பரிந்துரைத்திருந்தது.

படத்தின் காப்புரிமை TEKEE TANWAR/AFP/GETTY IMAGES

ஆயுத பேரம், அந்நிய செலாவணி மோசடி, போபர்ஸ் பீரங்கி ஊழல் என பல சர்ச்சைகளில் சந்திரசுவாமி சிக்கியிருந்தார்.

சக்தி மிக்க நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், உயர் அதிகாரிகள், அரசர்கள் பிரபலங்கள், மற்றும் வியாபாரிகளிடம் நெருக்கமாக இருந்தவர் இவர்.

தொண்ணூறுகளில், வர்த்தகம், உளவு, அரசியல், சர்வதேச உறவுகள், ஆயுத கொள்முதல்-விற்பனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இவர் பெயர் அடிபடாமல் இருந்தது இல்லை.

அந்தக் காலக்கட்டத்தில், நேபாளத்தில் இருந்து பப்லு ஸ்ரீவாத்சவ் என்ற நிழலுலக தாதாவை சிபிஐ தில்லிக்கு அழைத்துவந்தது.

படத்தின் காப்புரிமை PHOTODIVISION.GOV.IN

தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்புடையவராக்க கருதப்பட்ட பப்லு ஸ்ரீவாத்சவிடம் விசாரணை நடத்தப்பட்டதில் சந்திரசுவாமியுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

அதன் பிறகு தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சந்திரசுவாமி கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பல ஆண்டுகளாக ஊடகங்களின் பார்வைக்கு சிக்காமல் வாழ்ந்துவந்த சந்திரசாமி இன்று காலமானார்.

இதையும் படிக்கலாம் :

3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ?

புற்றுநோயை எதிர்த்து போராடிய 'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகன் மரணம்

வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்த ஆண்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்