சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான பிடிவாரண்டிற்கு உயர்நீதிமன்றம் தடை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பிடிவாரண்டிற்கு எதிராக தமிழக நடிகர்கள் தாக்கல் செய்த மனுவை உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்திருந்த நிலையில், பிடிவாரண்டிற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக நடிகர்கள் 8 பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவாரண்டிற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி நடிகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி விமலா தலைமையிலான அமர்வுமுன் நடிகர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதி பிடிவாரண்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

முன்பு, நடிகர் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களும் வரும் ஜூன் மாதம் 17 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்றைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

நேற்று புதன்கிழமையன்று இந்த 8 நடிகர்கள் தரப்பிலான வழக்கறிஞர் விஸ்வநாத், உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த 23 ஆம் தேதி, செவ்வாய்கிழமையன்று, நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.

பிற செய்திகள் :

பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த 23 ஆம் தேதி நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.

நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிறப்பித்திருந்த இந்த உத்தரவில், இந்த நடிகர்களை நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது.

தொடர்ந்து உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ மரியசூசை என்பவர் தொடுத்திருந்த வழக்கு, நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில்தான் இன்றைய உத்தரவும் வெளிவந்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு நடிகை, பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்ததாகக் கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடும் நடிகைகள் என ஒரு பட்டியலை ஒரு நாளிதழ் வெளியிட்டது. அதற்கு எதிராகத்தான் நடிகர், நடிகையர் குரல் கொடுத்தனர்.

படத்தின் காப்புரிமை YouTube

நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பேசிய நடிகர்களின் பேச்சு பத்திரிகையாளர்களை மிக கேவலமாக சித்தரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.

இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பரப்பப்பட்டிருந்தது.

அந்த வீடியோக்களை ஆதாரமாக கொண்டே இது தொடர்பான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை'

பிரிட்டனில் சமீபத்திய வரலாற்றில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்த ஓர் பார்வை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்