தாய்ப்பால் தானம்: சென்னை இல்லத்தரசிகளின் தாயுள்ள சேவை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''தாய்ப்பால் தானம்'' : தமிழக தாய்மார்களின் ஆச்சரிய முயற்சி (காணொளி)

சமூகவலைத்தளம் மூலமாக ரத்த தானம் செய்யவும் பெறவும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது போல, "தாய்ப்பால் தானம்" முறையும் சென்னையில் துவங்கியுள்ளது.

இயற்கையான முறையில், பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு ஒரு சில பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் குழு தான் 'நேச்சுரல் பேரன்டிங் கம்யூனிட்டி'.

தாய்ப்பால் தேவையின் அவசியத்தையும், நன்மையையும் பிரசாரம் செய்யவே இந்தக் குழு துவக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்தே தாய்ப்பாலுக்கு மாற்று தாய்ப்பால் தான் என்கிற கருத்தும் இந்தக் குழுவில் வலுப்பெறத் துவங்கியுள்ளது.

பின்னர் தாய்ப்பால் தேவைக்கு, அதை தானம் செய்யவும் இந்தக் குழுவில் இணைந்திருக்கும் தாய்மார்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

தாய்ப்பாலை சேகரிக்கும் முறை, அதை தேவைக்கு ஏற்ப, நாள் கணக்கில் பாதுக்காக்கும் முறை போன்றவற்றையும் இந்தக் குழுவில் இணைந்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார், 'நேச்சுரல் பேரன்டிங் கம்யூனிட்டி' என்கிற அந்த ஃபேஸ்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ஜெயராமன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''தாய்ப்பாலை சேகரித்து பாதுகாக்கும் முறையை கற்றுத் தருகிறோம்''

தனிக்குடித்தனம் என்கிற கலாசாரம் பெருகியுள்ள காலகட்டத்தில் இது போன்ற ஆதரவு அமைப்பு குழுக்கள் தேவை அதிகரித்து காணப்படுவதாகவும் 'நேச்சுரல் பேரன்டிங் கம்யூனிட்டி' ஃபேஸ்புக் குழுவை நிர்வகிப்போர் கூறுகின்றனர்.

'நேச்சுரல் பேரன்டிங் கம்யூனிட்டி' ஃபேஸ்புக் குழுவில் மருத்துவர்கள், பாலூட்டும் ஆலோசகர்கள் கூட உறுப்பினர்களாக உள்ளதால் முறையான வழிகாட்டுதல் உரிய நேரத்தில் கிடைக்கும் என்கிறார், 'நேச்சுரல் பேரன்டிங் கம்யூனிட்டி' ஃபேஸ்புக் குழுவின் மற்றொரு நிர்வாகியான சரண்யா விஜயகுமார்.

தனது தாய்ப்பால் தானம் செய்த அனுபவம் குறித்து குறிப்பிட்டு பேசிய சரண்யா விஜயகுமார், முதிர் தாய்ப்பாலின் தேவை அதிக அளவில் காணப்படுவதாகவும் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''முதிர் தாய்ப்பாலின் தேவை அதிக அளவில் உள்ளது'' : சரண்யா விஜயகுமார்

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட திடீர் தேவைக்காகவே இந்த தாய்ப்பால் தானம் துவங்கப்பட்டதாகவும், அது இரண்டு மாத காலக்கட்டத்தில் மிகப்பெரிய விரிவாக்கம் கண்டுள்ளதாக கூறுகிறார், அந்த ஃபேஸ்புக் குழுவை நிர்வகிக்கும் மற்றொரு உறுப்பினரான வஹீதா சதீஷ்குமார்.

குறிப்பாக 'வாட்ஸ் ஆப்' மூலமாக ரத்த தானத் தேவைக்கு தகவல்கள் பரிமாறப்படுவது போலவே, தாய்ப்பால் தானத்தின் தேவைக்கும் புதிய முயற்சி துவங்கப்பட்டுள்ளது என்கிறார் வஹீதா சதீஷ்குமார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''வாட்ஸ் ஆப் மூலம் தாய்ப்பால் தானம் திட்டம்'' : வஹீதா சதிஷ்குமார்

தனியார் வர்த்தக நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் 'அன்னையர் தின' கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமான விழிப்புணர்வு பிரசாரங்களில், இந்த லாப நோக்கமற்ற தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் திருச்சி, மதுரை, கோவை, தேனி, சேலம், தஞ்சை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாய்ப்பால் வங்கி சேவை துவங்கப்பட்டது.

சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரிவர சுரப்பதில்லை, தவிர 2, 3 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும் போது தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுகிறது. சில நேரங்களில் ஆதரவின்றி விடப்பட்ட குழந்தைகளுக்கும் கூட தாய்ப்பால் தேவைப்படுகிறது. எச்.ஐ.வி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட தாய் கூட தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் உயிரிழக்க நேரிடும் குழந்தைகளை காக்க, தாய்ப்பால் தானம் உதவுகின்றது.

பிற செய்திகள் :

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

பாலூட்டும் தாய் என நிரூபிக்க மார்பகங்களை அழுத்திக் காட்டுமாறு நிர்பந்தித்த ஜெர்மனி போலீஸ்

'பிரிட்டனில் ஒரு சதவீத தாய்மார் கூட தாய்ப்பால் கொடுக்கவில்லை'

காசுக்குத் தாய்ப்பால்: பிரஞ்சு பெண் விளம்பரம்

இதையும் படிக்கலாம்:

ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்