காலிஸ்தான் போராட்டத்தை ஒடுக்கிய கே.பி.எஸ்.கில் காலமானார்

  • 26 மே 2017
Image caption கே.பி.எஸ்.கில்

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் கே.பி.எஸ். கில், 82 வது வயதில் காலமானார். பஞ்சாப் மாநிலத்தில் உருவான பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதில் கில்லின் பங்கு முக்கியமானது.

கும்வர் பால் சிங் கில் என்ற கே.பி.எஸ் கில், பஞ்சாப் மாநில காவல்துறைத் தலைவராக இரண்டு முறை பணியாற்றியிருக்கிறார்.

வயது மூப்பின் காரணமாய் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கில் காலமானதை அவரது குடும்ப உறுப்பினர் அறிவித்தார்.

பஞ்சாபில் தீவிரவாதத்தை ஒடுக்கியதற்காக ஒருபுறம் அவருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டாலும், மறுபுறம் காவல்துறையினரின் செயல்பாடுகள் பற்றி மனித உரிமை அமைப்புகள் கடுமையான கேள்விகளை எழுப்பின. போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டதாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் போடப்பட்டன.

காலிஸ்தான் போராட்டத்தை ஒடுக்குவதில் கே.பி.எஸ்.கில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

1988 மே மாதத்தில், காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஆபரேஷன் பிளாக் தண்டர் என்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அது மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகவும் கே.பி.எஸ் கில் பதவி வகித்தார்.

காவல்துறையில் இருந்து 1995 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். 1989 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டார் கே.பி.எஸ் கில்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரூபன் தியோல் பஜாஜ் கே.பி.எஸ் கில் மீது குற்றம் சாட்டினார். கில் மீதான குற்றம் 17 ஆண்டுகளுக்கு பிறகு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், மேல் முறையீட்டில் தண்டனை குறைக்கப்பட்ட கில்லுக்கு சிறை தண்டனை வழங்கப்படவில்லை. அபராதத் தொகையும் குறைக்கப்பட்டது.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உயர் போலிஸ் அதிகாரி மீது நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு தொடுத்த முதல் பெண்

இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது

சட்டப் பேரவையில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்ப்பு

தமிழகத்தை ஆள தமிழன் என்ற உணர்வே போதுமானது: கமல்ஹாசன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்