காஷ்மீரில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் கூட்டாளியும் சுட்டுக் கொலை; பதற்றம்

  • 27 மே 2017
படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள டிரால் நகரில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதலின் போது புர்ஹான் வானியின் நெருங்கிய கூட்டாளியும், தீவிரவாத குழுவின் மூத்த தளபதியுமான சப்ஸார் பட் உள்பட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் காவல் வளையத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

''முதற்கட்ட சண்டையில் சப்ஸார் உள்பட குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்,'' என்று மூத்த காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

சப்ஸார், ஃபெய்ஸான் மற்றும் அடில் ஆகியோர்தான் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

சப்ஸார் கொல்லப்பட்ட செய்தி காஷ்மீர் முழுக்க வேகமாக பரவி நிலையில் அங்கு தற்போது பதற்றம் அதிகரித்து வருகிறது.

சப்ஸாரின் கொலை செய்தி இமயமலை பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களளில் தன்னிச்சையான பணிநிறுத்தத்தை தூண்டிவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

போராட்டம் பரவும் பட்சத்தில் இணையதளம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் முடக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சப்ஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ இடத்திற்கு அருகே பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் ஏற்கனவே கூடியுள்ளதாக நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்தாண்டு ஜூலை 8 ஆம் தேதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து, பரவலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட அதே போராட்ட நிலை தற்போது மீண்டும் நடைபெற்றுவிட கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் போராடி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள் :

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது

பெண்களை பாலியல் அடிமைகளாக்கி தீவிரவாத குழுவை விரிவாக்க முயலும் அல்-ஷபாப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்