`சங்கமத்திரா` திரைப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கம்?

  • 29 மே 2017
படத்தின் காப்புரிமை Sri Thenandal films

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் செலவில் வெளியாகவிருக்கும் சரித்திர பின்னனி கொண்ட படமாக அறிவிக்கப்பட்ட சங்கமித்திராவில், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

எட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக அமையவுள்ள இப்படத்தின் முதல் பார்வை கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது; அதில் ஸ்ருதி ஹாசன் உட்பட ஆர்யா, சுந்தர்.சி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹுமானும் கலந்து கொண்டார்.

சரித்திர பின்னணி கொண்ட திரைக்கதை என்பதால் லண்டனில் வாள் சண்டை பயிற்சியை மேற்கொண்டு வந்தார் ஸ்ருதி ஹாசன்; மேலும் சரித்திர உடைகளில் அவரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படத்திற்காக தொடர்ந்து ஸ்ருதி ஹாசனுடன் பணியாற்ற இயலவில்லை என தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Twiitter/@ThenandalFilms
Image caption ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமத்தின் டிவிட்டர் செய்தி

ஆனால் அதற்கான காரணத்தை அது வெளியிடவில்லை; இது குறித்து கேட்பதற்காக சுந்தர்.சி யை தொடர்பு கொண்ட போது அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

பிற சினிமா செய்திகள்:

தொடங்கியது 'காலா' படப்பிடிப்பு; மும்பையில் ரஜினிகாந்த்

சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

சினிமா விமர்சனம்: பிருந்தாவனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்