ஐ.ஐ.டி வன்முறை: கேரள முதல்வரை புகழ்ந்து எடப்பாடியை விமர்சித்த நெட்டிசன்கள்

சென்னை ஐஐடியின் ஏரோஸ்பேஸ் பொறியியலில் ஆராய்ச்சி மாணவரானசூரஜ் (36), கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; இவர் மாட்டிறைச்சிக்கு விதித்த தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஐஐடி வளாகத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இது குறித்து தமிழ் நாட்டின் முதலமைச்சரிடம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க கோரி கேட்டுக் கொள்ளப் போவதாகவும் கேரள முதலமைச்சர் பினயரி விஜயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Vishnu Priya

இந்த ட்வீட் வெளியானவுடன், கேரள முதல்வரின் அந்த டீவிட்டிற்கு பாரட்டுக்களை தெரிவித்தும் அதன் மூலம் தமிழக முதல்வரை கடிந்து கொண்டும் பலர் அதில் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பிரசன்னா என்ற ஒருவர், பினயரி விஜயனை `நீங்கள் ஒரு ராக் ஸ்டார், தோழர்` என்று பாராட்டி, எங்களுக்கும் உங்களைப் போல ஒரு முதல்வர் இருந்தால் தேவலை` என்று கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter/@madurai_tamilan
படத்தின் காப்புரிமை @mduagarathi

எங்களுக்கு இப்போது முதல்வர் இல்லை,நீங்கள் கூடுதல் பொறுப்பு ஏற்பீர்களா ? என்று கேட்கிறார் உத்தமவில்லன் என்ற பெயரில் டிவீட் செய்யும் ஒருவர்.

படத்தின் காப்புரிமை Vishnu Priya
படத்தின் காப்புரிமை Twitter/@jagadheshjaggu
படத்தின் காப்புரிமை Twitter/@riyaz0811
படத்தின் காப்புரிமை Twitter/@palani_shahan
படத்தின் காப்புரிமை Twitter/@itsmeguhan
படத்தின் காப்புரிமை Twitter/@raghulanrcs
படத்தின் காப்புரிமை Twitter/@vigneshss

எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைமையிடத்தைக் கேட்டுக்கொண்டு பிறகு சரியான பதில் தருவார் என்று நக்கலடிக்கிறார் மற்றொரு டிவிட்டர் பயன்பாட்டாளர், எஸ்.ஏ.பிரசன்னகுமார்.

படத்தின் காப்புரிமை Twitter/@prasannake77

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு `டம்மி பீஸ்`, பேசாம நீங்களே தமிழ்நாட்டுக்கும் முதல்வராகலாம் என்று கூறுகிறார் மனிஷ் பிர்லா என்ற ஒருவர்.

படத்தின் காப்புரிமை Twitter/@manishpvi

தமிழ்நாட்டில் சமீப காலங்களில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட மீம்கள் வலம் வருவது வாடிக்கையான ஒரு நிகழ்வாக உள்ளது.

இதில் நகைச்சுவையாக பல கருத்துகள் சித்தரிக்கப்பட்டாலும், பெரும்பாலும் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் நிலை குறித்து, மக்கள் மனதில் இருக்கும் அதிருப்தியே அவ்வாறு வெளிப்படுவதாக தெரிகிறது.

பிற செய்திகள்:

சென்னை ஐஐடியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மீதும் புகார்

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற மாணவர் தாக்கப்பட்டது ஏன்?

மாட்டிறைச்சிக்கு தடை போட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்