சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி துவங்கியது

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இயந்திரங்களின் மூலம் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை காலையில் துவங்கியுள்ளது.

Image caption இடிக்கப்படவுள்ள சென்னை சில்க்ஸ் கட்டடம்

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் புதன் கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த கட்டடமும் உள்ளே இருந்த பொருட்களும் எரிந்துபோயின.

கடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று இடிந்து உள்ளே விழுந்தது. அதற்குப் பிறகு தீ. முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு, அந்தக் கட்டடத்தின் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள குடிநீர் சேமிக்கும் தொட்டிகள் மண்ணால் நிரப்பப்பட்டு அங்கு எந்திரங்களை நிறுத்தி இடிக்க முடிவுசெய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள் :

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியில் தாமதம் ஏன்?

'சென்னை சில்க்ஸ் கட்டடம் விரைவில் இடிக்கப்படும்'

தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

அதன்படி 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் கொட்டப்பட்டு அந்த இடம் மேடாக்கப்பட்டது. அதன் பிறகு "ஜா கட்டர்" என்ற எந்திரம் கொண்டுவரப்பட்டு இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

கட்டடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவுக்கு ஆட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

'மயில் எப்படி கர்ப்பமாகிறது?' ராஜஸ்தான் நீதிபதி புது விளக்கம்

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் 'பலே உத்தி' : ஆய்வு

ஜூன் மாதத்தையே நடிகர் விஜய்க்கு சொந்தமாக்கி அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள்

செரீனாவின் குழந்தை ஆணா? பெண்ணா?: ரகசியத்தை போட்டுடைத்த வீனஸ் வில்லியம்ஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்