திகார் சிறையிலிருந்து விடுதலையானார் டி.டி.வி தினகரன்

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையிலிருந்த அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வெள்ளிக்கிழமை இரவு ஜாமீனில் விடுதலையானார்.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption டிடிவி தினகரன் விடுதலை

முன்னர், நேற்றைய தினம் டிடிவி. தினகரனுக்கும், இதே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் அளிப்பதாக டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டிருந்தார்.

இருவரும் 5 லட்சம் ரூபாய் செலுத்தி, சொந்த ஜாமீனில் செல்வதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி அனுமதி அளித்திருந்தார்.

சாட்சியங்களை கலைக்கக்கூடாது

டிடிவி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை இருவருக்கும் ஜாமீன் வழங்கும்போது நீதிபதி விதித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதியன்று, இரட்டை இல்லை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தினகரனுக்கு உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள் :

அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

டிடிவி தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன்

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்