தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என திமுகவின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

பட மூலாதாரம், Facebook/M.K.Stalin

சென்னையில், காயிதேமில்லத் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்து இது குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என குறிப்பிட்டார்.

மேலும் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டிய மு.க.ஸ்டாலின், அதற்கு பதிலாக தமிழை ஆட்சி மொழியாக்க அவர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே கருணாநிதியின் வைரவிழா கூட்டம் குறித்து முன்னதாக விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாட்டில் காவிகள் இருக்கலாம்; பாவிகள் தான் இருக்க கூடாது என கூறியுள்ளதை சுட்டிக்காட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், அது அவரது அரசியல் நாகரிகத்தை காட்டுவதாக கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்