என்டிடிவி நிறுவகர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை

என்டிடிவி செய்தித் தொலைக்காட்சி நிறுவகர் பிரணாய் ராயின் டில்லி மற்றும் டெராடூன் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

என்டிடிவி செய்தித் தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராய்

பட மூலாதாரம், TWITTER

என்டிடிவி வெளியிட்ட தனியார் வங்கி பற்றிய செய்தியால் அந்த வங்கிக்கு நட்டம் ஏற்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா, ஆர்.ஆர்.பி.ஆர் ஹோல்டிங்ஸ் ஆகியோர், வங்கிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருக்கும் ஐசிஐசிஐ நிறுவனம், அவர்கள் மீது 48 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, டெல்லி மற்றும் டேராடூனில் நான்கு இடங்களில் மத்திய புலனாய்வு முகமை சோதனைகள் மேற்கொண்டுள்ளது.

தங்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக என்டிடிவி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், NDTV TWITTER

''இந்தியாவில், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பலவீனமாக்க மேற்கொள்ளும் முயற்சிகளின்முன் அடிபணிய மாட்டோம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.''

என்டிடிவியின் ஹிந்தி சேனலான `என்டிடிவி இந்தியா` மீது கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஒரு நாள் ஒளிபரப்புத் தடையை, செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தற்காலிகமாக நிறுத்திவைத்தார்.

மத்திய அரசு விதித்த ஒரு நாள் ஒளிபரப்புக்கு தடைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் என்டிடிவி தொடர்ந்த வழக்கு தொடுத்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்