'குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும்'

இந்திய குடியரசுத்தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதியன்று நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று புதன்கிழமை அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய ஜனாதிபதி மாளிகை

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி குடியரசுத் தலைவர் தேர்தல் தேதிகளை இன்று அறிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் தேர்தல் அட்டவணை பின்வருமாறு:-

ஜூன் 14 - வேட்பு மனுத்தாக்கல் செய்ய தொடக்க நாள்

ஜூன் 28 - வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்

ஜூன் 29 - வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு நாள்

ஜூலை 1 - வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்

ஜூலை 17 - குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் நாள்

ஜூலை 20 - வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்

படத்தின் காப்புரிமை ELECTION COMMISSION OF INDIA
Image caption இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி

இந்த அறிவிப்பை வெளியிட்ட நசிம் ஜைதி மேலும் கூறுகையில், ''ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடும் சூழலில், தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 17-ஆம் தேதியன்று நடக்கும். இத்தேர்தலுக்காக நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், ''அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவர்'' என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் தொடரும் ஆதரவு

கத்தார் மீதான தடை: இந்தியர்களின் நிலை என்ன?

மன்மோகன் சிங்: நடிகர் அனுபம் கெர் முன்னாள் பிரதமர் கதாபாத்திரத்தை ஏற்கிறார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்