சென்னையில் - இந்தியாவின் முதல் பிரத்யேக "பெண்களுக்கான பகிர்வு பணியிடம்"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் - இந்தியாவின் முதல் பிரத்யேக "பெண்களுக்கான பகிர்வு பணியிடம்"(காணொளி)

குழந்தைகள் இருந்தால், தாய்மார்கள் இந்தியச் சூழ்நிலைகளில் வேலைக்குச் செல்வது சிரமம்.குழந்தைகளை பார்த்துக்கொள்ள எல்லா நிறுவனங்களிலும், க்ரெய்ஷ் போன்ற வசதிகள் கிடைப்பதில்லை.

வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் பெண்களுக்கும் குழந்தைகளை வேலை நேரத்தில் பார்த்துக்கொள்வது கடினம். இந்த பிரச்சனைக்குத் தீர்வாக, இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையில், பெண்களுக்காக இந்த பணியிடம் வாடகைக்கு விடப்படுகிறது.

பெண்களுக்காக நடத்தப்படும் இது போன்ற பணியிடங்களை, நாடெங்கிலும் தொடங்க அதன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு தேவையான வசதிகள் இந்த பிரத்யேக பணியிடத்தில் செய்யப்பட்டுள்ளது.

பணியிடத்தில் உள்ள பெண்களுக்கு மளிகை, காய்கறி போன்ற பொருட்களை வாங்கி தரும் சிறப்பு வசதியும் இங்குள்ளது.

பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது போன்ற இடங்கள் உகந்தது என பயனாளிகள் கருதுகின்றனர்.

தாய்மார்கள் தடையில்லாமல் சிறப்பாக பணியாற்ற, குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றும் இந்த பகிர்வு பணியிடத்தில் உள்ளது. மனஅழுத்தம் போக்கிக்கொள்ளும் வசதிகள், உணவு உண்ண சிறப்பு இடம் போன்ற வசதிகளும் இந்த இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்

பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்