தமிழக முதல்வர், விவசாயிகள் சந்திப்பு - சென்னை போராட்டம் வாபஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததால் சென்னை போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image caption கோப்புப்படம்

கரும்புக்கான கொள்முதல் பாக்கி தொகையை இரண்டு மாதங்களில் பெற்று தருவதாகவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைகளை ஏலம் விடாமல் தடுத்துவிடுவதாகவும், உச்ச நீதிமன்ற வழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.

எலிக்கறி, சாட்டையடி, மண்சோறு: தமிழக விவசாயிகளின் நூதன போராட்டங்கள் (புகைப்பட தொகுப்பு)

சென்னையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

மேலும், நெடுவாசல் ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதாகவும், அமராவதியில் இருந்து தண்ணீரை கொண்டுவர முயற்சிப்பதாகவும் முதல்வர் பழனிச்சாமி வாக்குறுதி அளித்திருப்பதாக இந்த விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்த அய்யாக்கண்ணு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

வறட்சியின் பிடியில் பொய்த்த தமிழக விவசாயம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வறட்சியின் பிடியில் பொய்த்த தமிழக விவசாயம்

விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட பாக்கி வைக்கப்பட்டிருக்கும் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாயை நிலுவைத் தொகையைத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை துவங்கியது.

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா பாலத்தில் மறியல்; போக்குவரத்து ஸ்தம்பிப்பு

`பயிரைக் காப்பாற்ற தாலியை இழந்த எங்களை காப்பாற்ற யாருமில்லையா?'

32 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சேர்ந்து, 32 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

Image caption டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் போராட்டம் (கோப்புப்படம்)

தமிழக முதல்வர் இன்று ஒரு மணிநேரம் தங்களை சந்தித்து கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்திருப்பதை தொடர்ந்து தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

ஜூலை 10ஆம் தேதிவரை இந்தப் போராட்டம் நடக்குமென விவசாயிகள் கூறியிருந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பரப்பியதால், அவர்கள் போராட்டம் நடத்திய வாலஜா சாலையின் ஒரு பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

கடற்கரைச் சாலையிலிருந்து வாலஜா சாலைக்குள் திரும்பவும் திருவல்லிக்கேணியிலிருந்து வாலஜா சாலையில் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது.

சுரங்கத்தில் விவசாயம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சுரங்கத்தில் விவசாயம் - காணொளி

தொடர்படைய செய்திகள்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்தில் `பக்கபலமாக' இளைஞர்கள்!

பிற செய்திகள்

தலித்தை திருமணம் செய்ததால் மகளை எரித்துக் கொன்ற முஸ்லிம் தாய்

சினிமா விமர்சனம்: தி மம்மி

இலங்கை: 11 மாவட்டங்களில் வறட்சியால் 8.5 லட்சம் பேர் பாதிப்பு

இளம் குழந்தைகள் உயரமாக வளர தினமும் ஒரு முட்டை?

விளையாட்டு வீரர்கள் பதக்கத்தை விற்பதைத் தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை-சுசாந்திக்கா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்