மாட்டிறைச்சி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

  • 12 ஜூன் 2017

சென்னை ஐஐடி வளாகத்தின் வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்ணின் கையை காவல்துறையினர் முறித்தது தொடர்பாக, தமிழக உள்துறை செயலர் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க கூறி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜீ மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று, திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது அவர்களுக்கு 2 வார கால அவகாசம் வழங்கி இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு கடும் விதிமுறைகளை விதித்து கடந்த மே மாதம் 25-ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னை ஐஐடி-இல் சில மாணவர்கள் மாட்டு இறைச்சி விருந்து ஒன்றை நடத்தினர். இதில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அதை தொடந்து அந்த விருந்தில் கலந்துகொண்ட சூரஜ் ராஜகோபாலன் என்ற மாணவர் ஐஐடி வளாகத்திலேயே தாக்கப்பட்டார்.

சூரஜைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்படும் மாணவர் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மாட்டிறைச்சி விருந்தில் கலந்துகொண்ட மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்க, சென்னை ஐஐடி வளாகத்தின் வெளியே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளவரசி என்பவரது கைகளை காவல்துறையினர் முறிக்கும் வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியானது.

இச்சம்பவம் தொடர்பாக ராஜசேகர் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணையில்தான் இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டு, வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற மாணவர் தாக்கப்பட்டது ஏன்?

சென்னை ஐஐடியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மீதும் புகார்

ஐ.ஐ.டி வன்முறை: கேரள முதல்வரை புகழ்ந்து எடப்பாடியை விமர்சித்த நெட்டிசன்கள்

ஐஐடி மாணவர்களின் மாமிச உணவும் மத்திய அரசும்

பிற செய்திகள்

எந்திர பகுதியில் துளை: சிட்னிக்கு திரும்பி தரையிறங்கிய 'சைனா ஈஸ்டர்ன்' விமானம்

ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும் – அருண் ஜெட்லி

ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்?

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்தது இந்தியா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்