கால்நடை விற்பனை விதிகள்: மத்திய அரசு விளக்கம் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

  • 15 ஜூன் 2017

இறைச்சிக்காக கால்நடையை விற்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடை குறித்த விரிவான விளக்கத்தை ஜூலை 11ம்தேதி மத்தியஅரசு அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கால்நடை விற்பனை தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்கக் கோரி வழக்கு ஒன்று தாக்கலானது.

இந்த புதிய விதிகள் இறைச்சி விற்பனைக்கான தடையாக உள்ளது என்று அந்த வழக்கில் புகார் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற செய்தியாளர் வெங்கடேசனிடம் கேட்டபோது, மத்திய அரசின் முழு விளக்கத்தையும் பதில் மனுவாக பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்றார்.

படத்தின் காப்புரிமை Thinkstock

வழக்கு தாக்கல் செய்தவர்கள் இந்த விதிகள் இறைச்சி உணவு மீதான தடையை மறைமுகமாக ஏற்படுத்தியுள்ளன என்றனர். புதிய விதிகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த விதிகள் மீது இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் மத்திய அரசு இந்த விதிகளை மறுபரிசீலனை செய்யவுள்ளது என்று அரசு வழக்கறிஞர் கூறினார் என்று தெரிவித்தார் வெங்கடேசன்.

மேலும் புதிய விதிகள் இறைச்சி சந்தையை முறைப்படுத்துவதற்காகதான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசு வழக்கறிஞர் கூறினார் என்றார் வெங்கடேசன்.

பிற செய்திகள்

மோதி அரசின் கால்நடை விற்பனை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பும் ஆதரவும்

'விவசாய கடன் தள்ளுபடி நிவாரணம்தான்; தீர்வாகாது'

இந்தியா: எருமை இறைச்சி ஏற்றுமதி 11 சதவீதம் சரிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்