தவறான எல்லைப்படம் : இந்திய உள்துறை அமைச்சகம் விசாரணை

  • 15 ஜூன் 2017

பாகிஸ்தானுடனான இந்திய எல்லைக்குப் பதிலாக, ஆஃப்ரிக்காவில் உள்ள மொரோக்கோ மற்றும் அங்குள்ள ஸ்பானிய நிலப்பரப்புக்கு இடையேயான படம் தவறுதலாக எப்படி பிரசுரிக்கப்பட்டது என்பது குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் விசாரணை செய்து வருகிறது.

Image caption 2006 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் புகைப்படக்காரர் ஜேவியர் மொயானோ இந்த படத்தை எடுத்தார் என்ற தகவலை ஆல்ட் நியூஸ் (Alt News) வலைத்தளம் வெளியிட்டுள்ளது

உள்துறை அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையில், ஆப்ரிக்காவில் ஸ்பெயினின் பகுதியான, சியூட்டாவுக்கும் மொரோக்காவுக்கும் இடையே உள்ள வேலியிடப்பட்ட எல்லைப்பகுதியைக் காட்டும் ஒரு படம் , இந்திய பாகிஸ்தானிய எல்லைப் பகுதியில் நடந்து வரும் ராட்சத மின் விளக்குகளை அமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் காட்ட பயன்படுத்தப்பட்டது.

இந்த தவறு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். தவறு ஏதும் நடந்திருந்தால், அமைச்சகம் மன்னிப்புக் கேட்கும் என்று உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷி கூறினார்.

உள்துறை அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையில் வெளியான படத்தை பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் விமசர்னம் செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை SUMIT CHAUDHARY
படத்தின் காப்புரிமை LATHAJISHNU
படத்தின் காப்புரிமை SEKAR GUPTA

அரசாங்கம் எவ்வாறு தனது வருடாந்திர அறிக்கையில் தவறான படத்தை வெளியிடலாம், இணையத்தில் இருந்து ஒரு படத்தை எடுத்து பிரசுரிப்பது மோசமான செயல் என்று கண்டித்தனர்.

பிற செய்திகள்

மோதி அரசின் கால்நடை விற்பனை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பும் ஆதரவும்

'விவசாய கடன் தள்ளுபடி நிவாரணம்தான்; தீர்வாகாது'

இந்தியா: எருமை இறைச்சி ஏற்றுமதி 11 சதவீதம் சரிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்