டிடிவி தினகரன் கட்சிப்பணியாற்றுவதை அனுமதிக்க ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வரிடம் கோரிக்கை

  • 15 ஜூன் 2017

அ.தி.மு.கவில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை இன்று சந்தித்து சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

அ.தி.மு.க. அம்மா பிரிவின் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் இருந்து வருகிறார். ஆனால், சில நாட்களுக்கு முன்பாக, கட்சிப் பணியிலிருந்து டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் ஒதுங்கியிருப்பார்கள் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். தினகரனும் தான் ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தினகரனுக்கு பிணை வழக்கப்பட்டது. இதற்குப் பிறகு சென்னை வந்த தினகரன் தான் கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதுவரை 34 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனை சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

Image caption டிடிவி தினகரனுடன் ஆதரவு எம்.எல்.ஏ போஸ்

இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவாக உள்ள அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் முதலமைச்சர் பழனிச்சாமியை வியாழக்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, தினகரன் கட்சிப் பணியாற்றுவதை அனுமதிக்க வேண்டுமென்ற கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வரும்போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்றும் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image caption தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி

இதற்கு முதலமைச்சர் தரப்பு என்ன பதிலளித்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையில் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது தலைமையிலான அ.தி.மு.க. சசிகலா தலைமையில் ஒரு பிரிவாகவும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிளவுபட்டது. இதில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அவரது பிரிவு, தினகரன் தலைமையில் செயல்பட்டது. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, தினகரனை ஒதுக்கிவிட்டதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

முதல்வரை சந்தித்த 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்: கோரிக்கை என்ன?

3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ?

பிற செய்திகள்

தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்

''பெண்கள் குண்டாக இருந்தால் குற்றமல்ல''

கானல் நீரானதா காவிரி நீர்? கைவிட வேண்டுமா குறுவை சாகுபடியை?

தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்