சென்னை ஒரு திகில் உணவகம் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் ஒரு திகில் உணவகம் (காணொளி)

  • 16 ஜூன் 2017

''பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து'' என்பார் மாணிக்கவாசகர். "பேய்கள் சாலப் பரிந்தூட்டும்" உணவகம் ஒன்று சென்னையில் அமைந்திருக்கிறது. (காணொளி சென்னைச் செய்தியாளர் ஜெயக்குமார் )

சென்னையில், குறிப்பிட்ட ஒரு கருப்பொருளை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் "தீம்" உணவகங்களில் இதுவும் ஒன்று.

உணவு பரிமாறும் முறையிலும், பரிமாறப்படும் உணவுகளின் பெயர்களிலும் கூட இங்கு ஒரு அமானுஷ்ய தன்மை இருக்கிறது.

'பேய் விருந்து' என பெயரிடப்பட்டுள்ள மதிய உணவு இந்த உணவகத்தில் மிக பிரபலம்.

உணவகத்திற்குள் திரும்பும் பக்கமெல்லாம் அமானுஷ்ய கதை கூறும் படங்களும், பேய் பொம்மைகளும் காணப்படுகிறது.

அந்த உணவகத்தில் ஆங்காங்கே எழுப்பப்படும் சத்தங்களும் கூட மென்மையான இதயம் கொண்டவர்களுக்கு திகிலூட்டக் கூடும்!

அனைத்திலும் வித்தியாசத்தை எதிர்பார்க்கும் சிலர், இது போன்ற விசித்திரமான உணவகங்களையும் ரசிக்கத்தான் செய்கின்றனர்.

'பேய்ப்பசி' எடுத்தால் இங்கு போகலாம்!

பிற செய்திகள் :

``பறக்கும் வான்கோழி` போன்ற பறவையினம் வாழ்ந்தது கண்டுபிடிப்பு

அடுக்குமாடிக் கட்டடங்களில் தீப்பிடித்தால் தப்புவது எப்படி?

இந்திய வெற்றிப் பயணத்தின் 5 முக்கிய அம்சங்கள்

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்