ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா பிரச்சனை : திமுக வெளிநடப்பு

  • 19 ஜூன் 2017

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கள்கிழமை விளக்கம் அளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அது தொடர்பான புலன்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த முக்கிய எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தது.

இந்த வெளிநடப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், இரண்டு மாதங்களாக நிலுவையில் நீடிக்கும் ஒரு விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை வரியில் விளக்கம் அளிப்பதை எவ்வாறு ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

படத்தின் காப்புரிமை Facebook/M.K.Stalin

தேர்தல் ஆணைய பரிந்துரையை பற்றி முன்னதாக தகவல் தெரியாது என முதலமைச்சர் கூறுவதே, இது செயலற்ற ஆட்சிதான் என்பதை காட்டுவதாகவும் அப்போது மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாகவே, அந்த இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டிருந்ததையும் அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் ஆளாகியிருப்பதால், முறையான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய, அந்த விசாரணையை மேற்கொள்ளும் தமிழக காவல்துறை சுதந்திரத்தோடு செயலாற்ற ஏதுவாக, காவல்துறையின் பொறுப்பை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் தமிழக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம்

அமைச்சர்கள், முதலமைச்சர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்ய ஸ்டாலின் கோரிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து — தேர்தல் ஆணையம் கூறும் காரணம் என்ன?

பிற செய்திகள்

லண்டனில் மசூதிக்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் மோதி ஒருவர் பலி, எட்டு பேர் காயம்

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

இந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்