ராம் நாத் கோவிந்த் - பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்

  • 19 ஜூன் 2017

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த்தை தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக, பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை PIB

தலித் குடும்பத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எதிர்க் கட்சிகளின் பல தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தியும், தங்கள் கட்சியின் தலைவர்களிடம் கலந்தாலோசித்தும் இந்த வேட்பாளரை முடிவு செய்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 23 ஆம் தேதியன்று ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அமித் ஷா அறிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்